பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மே’ மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் 500க்கும் மேற்பட்ட T-56 ரக தோட்டாக்கள் பேலியகொடை மீன் சந்தைக்கு அருகில் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது, T-56 ரக 4 மெகசின்களும், மைக்ரோ பிஸ்டலையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேல் மாகாண வடக்கு குற்றவியல் பிரிவு முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைய இந்த தகவல் தெரியவந்தது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘கெஹெல்பத்தர பத்மே’ என அழைக்கப்படும் மன்தினு பத்மசிறி உள்ளிட்ட பல பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் சமீபத்தில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் தற்போது நாட்டில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here