ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

குறித்த போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது.

இதனை தொடர்ந்து பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவரிடம் இருந்து ஆசிய கிண்ணத்தை வாங்குவதில்லை என்று இந்திய அணி தெரிவித்திருந்தது.

இதனால் கிண்ணம் மற்றும் பதக்கங்கள் இந்திய அணிக்கு வழங்கப்படவில்லை

இதனையடுத்து ஆசிய கிண்ணம் மறுக்கப்பட்டது தொடர்பாக ஐ.சி.சி.யிடம் இந்தியா முறையிடும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் தேவ்ஜித் சாய்க்கியா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆசிய கிண்ணத்தை இந்தியாவிற்கு அனுப்புமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வலியுறுத்திய நிலையில், போட்டியை நடத்திய ஐக்கிய அரபு அமீரக வாரியத்திடம் ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவர் மோசின் நக்வி ஒப்படைத்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here