இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) பொதுமக்களை அறியப்படாத WhatsApp குழுக்களில் இணைய வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் அந்நியர்களுடன் நிதி பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும், சரிபார்க்கப்படாத மூலங்களிலிருந்து பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் இதுபோன்ற குழுக்கள் மூலம் மோசடி பரிவர்த்தனைகள் தொடர்பான சம்பவங்கள் குறித்து இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவுக்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here