வயலில் வைக்கோலுக்கு தீ வைத்த நபர் அதில் சிக்கி பலி!

ஹிங்குரக்கொடை வராஹேன பகுதியில் உள்ள விவசாயி ஒருவர், நேற்று (03) மதியம் தனது நெல் வயலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தார்.

தீ விபத்தில் உயிரிழந்த நபர், ஹிங்குரக்கொடை போகஸ் சந்தி பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

அவர், வரும் போகத்திற்காக நெல் வயலைத் தயார் செய்யும் நோக்கில், அறுவடை செய்த பின்னர் மீதமுள்ள வைக்கோலுக்கு தீ வைத்தார்.

இந்நிலையில், இந்த நாட்களில் நிலவும் வெப்பமான வானிலை மற்றும் காற்று வீச்சால் தீ பரவி, அவர் அதில் சிக்கியுள்ளார்.

அப்பகுதியில் வசிப்பவர் ஒருவர், அவரை தீயில் சிக்கிய நிலையில் கண்டு, மற்றவர்களுக்கு தகவல் தெரிவித்தாலும், அவர் ஏற்கனவே பலத்த காயங்களுக்குப் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் உடல், பிரேதப் பரிசோதனைக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஹிங்குரக்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles