ஆஷா போஸ்லே குரலைப் பயன்படுத்தத் தடை

பிரபல ஹிந்தி பாடகி ஆஷா போஸ்லேவின் குரலை AI மூலம் மறு உருவாக்கம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரபல பின்னணி பாடகியான ஆஷா போஸ்லே எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக பல்வேறு திரைப்படங்களில் பாடியுள்ளார்.

இவர் 2 தேசிய திரைப்பட விருதுகள், பதினெட்டு மகாராஷ்டிர மாநில விருதுகள், சிறந்த பின்னணி பாடகிக்கான ஏழு பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

இந்தியத் திரையுலகின் தலைசிறந்த பாடகிகளில் ஒருவராகத் திகழும் ஆஷா போஸ்லே 1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 12,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார்.

இதனிடையே தனது குரலை AI மூலம் ஜெனரேட் செய்து விற்கப்படுவதாகக் குற்றம்சாட்டி ஆஷா போஸ்லே மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்தநிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆஷா போஸ்லேவின் குரல், ஸ்டைல், பேச்சு, மற்றும் அவரது புகைப்படங்களைப் பயன்படுத்தி AI மூலம் மறு உருவாக்கம் செய்யத் தடை விதித்துள்ளது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles