இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு மிட்செல் மார்ஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 19ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் ஒருநாள் போட்டிகளும், அதனை தொடர்ந்து டி20 போட்டிகளும் நடக்கின்றன.

இந்த தொடருக்கான இந்திய அணி சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு மிட்செல் மார்ஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய ஒருநாள் அணி விவரம்: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கன்னோலி, பென் துவார்ஷியஸ், நாதன் எல்லீஸ், கேமரூன் க்ரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஓவன், மேத்யூ ரென்ஷா, மேத்யூ ஷார்ட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா.

ஆஸ்திரேலிய டி20 அணி விவரம்: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அப்போட், சேவியர் பார்ட்லெட், டிம் டேவிட், பென் துவார்ஷியஸ், நாதன் எல்லீஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மேத்யூ குன்னமென், மிட்செல் ஓவன், மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆடம் ஜாம்பா.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles