நடிகை பூஜா ஹெக்டே பிறந்தநாள்..!- சிறப்பு போஸ்டர் வெளியிட்ட DQ41 படக்குழு

துல்கர் சல்மான்- ரவி நெலகுடிடி (Ravi Nelakuditi)- சுதாகர் செருகுரி (Sudhakar Cherukuri) – SLV சினிமாஸ்- கூட்டணியில் தயாராகி வரும் திரைப்படம் DQ 41.

துல்கர் சல்மான் அவரது 41 வது திரைப்படமான DQ 41-ல், அறிமுக இயக்குநர் ரவி நெலக்குடிடியுடன் இணைந்துள்ளார்.

சமகால காதல் கதையாக வளமான நாடகத்தன்மையுடன் தயாராகும் இந்த திரைப்படத்தை எஸ்.எல்.வி. சினிமாஸ் நிறுவனம் சார்பில், சுதாகர் செருகுரி தயாரிக்கிறார். DQ41 திரைப்படம் எஸ்.எல்.வி. சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் பத்தாவது திரைப்படம் ஆகும்.

இப்படத்திற்கு அனய் ஓம். கோஸ்வாமி ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருதை வென்ற ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது. இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிப்பதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே இன்று தனது 35வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். பூஜா ஹெக்டே பிறந்தநாளை முன்னிட்டு DQ41 படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles