2025ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு

2025ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதிக்கான நோபல் பரிசு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோயல் மோய்கிர் (நெதர்லாந்து வம்சாவளி அமெரிக்க- இஸ்ரேல் பொருளாதார வரலாற்றாசிரியர்), பிலிப் அகியோன் (பிரான்ஸ் பொருளாதார நிபுணர்), பீட்டர் ஹோவிட் (கனடா பொருளாதார நிபுணர்) ஆகியோருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப முன்னேற்றம் மூலம் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கான முன் தேவைகள் என்ன என்பது தொடர்பாக ஆய்வுவாக்கவும், காலாவதியான செயல்முறைகளுக்கு மாற்றாக புதிய கண்டுபிடிப்புகளுக்காகவும் கூட்டாக நோபல் பரிவு அறிவிக்கப்படுள்ளது.

மருத்துவத்திற்கான நோபல் பரிசு

அமெரிக்காவை சேர்ந்த மேரி இ பிரன்கோவ், ஃபிரெட் ராம்ஸ்டெல், ஜப்பானை சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகிய 3 பேருக்கு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இயற்பியலுக்கான நோபல் பரிசு

அமெரிக்காவை சேர்ந்த ஜான் கிளார்க், மைக்கேல் எச். டெவோரெட், ஜான் எம். மார்டினிஸ் ஆகிய 3 பேருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இலக்கியத்திற்கான நோபல் பரிசு

71 வயதான ஹங்கேரி எழுத்தாளர் ‘லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை’-க்கு ( László Krasznahorkai)அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு

அமைதிக்கான நோபல் பரிசுக்குக்கு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது வெனிசுலா நாட்டு அரசியல்வாதியான இவர் அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவராக உள்ளார்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles