Monday, February 2, 2026
HomeSportsஐசிசி தரவரிசையை ஆக்கிரமித்த ஆப்கானிஸ்தான் வீரர்கள்

ஐசிசி தரவரிசையை ஆக்கிரமித்த ஆப்கானிஸ்தான் வீரர்கள்

ஐசிசி தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகி உள்ளது. அதன்படி ஒருநாள் போட்டிக்கான பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர்களில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

அந்த வகையில் ஒருநாள் பேட்டர்கள் தரவரிசையில் இப்ராகீம் சத்ரன் 8 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். இதனால் 3-வது இடத்தில் இருந்து 10-வது இடத்தில் இருக்கும் பேட்டர்கள் ஒரு இடம் பின் தங்கினர். மற்றபடி பேட்டர் தரவரிசையில் மாற்றமில்லை.

அதேபோல் டெஸ்ட் பேட்டர் தரவரிசையில் இந்திய அணியின் ஜெய்ஸ்வால் 2 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார். மற்றபடி இதிலும் மாற்றமில்லை.

ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கான் 5 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். மற்றொரு வீரரான ஓமர்சாய் 19 இடங்கள் முன்னேறி 21-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய வீரர் குல்தீப் யாதவ் ஒரு இடம் பின் தங்கி 5-வது இடத்தில் உள்ளார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular