நடிகர் சிலம்பரசன் ‘தக் லைப்’ திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அரசன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது.

இந்த திரைப்படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தொடங்கியது.

சிம்பு இப்படத்தில் 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அரசன் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் அறிவித்துள்ளார்.

இதன்மூலம் சிம்பு மற்றும் வெற்றிமாறன் உடன் முதல்முறையாக அனிருத் கூட்டணி சேர்ந்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here