வசூல் குவிக்கும் ‘டியூட்’… 4 நாட்களில் எவ்வளவு தெரியுமா?

இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் ‘டியூட்’. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன், டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17-ந்தேதி வெளியான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், ‘டியூட்’ படம் வெளியான நாள் முதல் வசூல் குவித்து வருகிறது. அந்த வகையில் படம் வெளியான நான்கு நாட்களில் உலகளவில் ரூ.83 கோடி வசூலை குவித்துள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles