இலங்கையில் வாகனங்களின் விலை அண்மைய வாரங்களில் ரூ 1 மில்லியன் (பத்து இலட்சம்) முதல் ரூபா 1.5 மில்லியன் (பதினைந்து இலட்சம்) வரை குறைந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சந்தையில் ஏற்பட்ட தேவை குறைவு (decline in demand) மற்றும் ஜப்பானில் ஏல விலைகள் (auction prices) குறைந்தமை ஆகிய காரணங்களால் இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரின்சிகே (Indika Sampath Merinchige) கூறினார்.

முன்னர் சுமார் ரூபாய் 10 மில்லியனுக்கு விற்கப்பட்ட வாகனங்கள் தற்போது சுமார் ரூபா 500,000 குறைவாகவும், ரூபா 20 மில்லியன் அளவில் இருந்த வாகனங்களின் விலைகள் ரூபா 1 மில்லியன் முதல் 1.5 மில்லியன் வரையிலும் குறைந்துள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here