செர்பியாவின் நாடாளுமன்றம் அருகே துப்பாக்கி சூடு

செர்பியாவில் ஜனாதிபதி அலெக்சாண்டருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேவேளை, அதிபரின் கட்சியை சேர்ந்தவர்கள் அவருக்கு ஆதரவாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், ஜனாதிபதி அலெக்சாண்டருக்கு ஆதரவாக அந்நாட்டு நாடாளுமன்றம் அருகே கூடாரம் அமைக்கப்பட்டு சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

குறித்த பகுதிக்கு இன்று வந்த சிலர் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர்.

இந்த துப்பாக்கி சூட்டில் 57 வயதான முதியவர் படுகாயமடைந்தார்.

உடனடியாக விரைந்து சென்ற பாதுகாப்புப்படையினர், முதியவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

நாடாளுமன்றம் அருகே நடந்த இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டை பயங்கரவாத தாக்குதல் என அதிபர் தெரிவித்துள்ளார்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles