தென் கொரியாவில் ஆசிய-பசிபிக் பொருளாதார உச்சி மாநாடு 29-ந் தேதி தொடங்குகிறது.

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த மாநாட்டில் டிரம்ப் உரையாற்ற இருக்கிறார்.

மறுநாள் (30-ந்தேதி )அவர் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேச இருப்பதாக அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்து உள்ளார்.

அதிபர் டிரம்ப் இன்று இரவு (வெள்ளிக்கிழமை) மலேசியா செல்வார் என்றும் அதன்பிறகு ஜப்பான் மற்றும் தென்கொரியா செல்ல இருக்கிறார் என அவர் கூறி இருக்கிறார்.

அமெரிக்காவி வர்த்தக போருக்கு மத்தியில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது டிரம்ப்பும், ஜின்பிங்கும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேச உள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here