விக்ரமின் 63ஆவது திரைப்படம் குறித்து வெளியான புதிய அறிவிப்பு

‘வீர தீர சூரன்’ திரைப்படத்திற்கு பின்னர் நடிகர் விக்ரமின் புதிய திரைப்படம் தொடர்பிலான புதிய தகவலொன்று தற்போது வெளியாகியுள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் விக்ரம் நடிக்கவுள்ள புதிய திரைப்படம் தொடர்பான அறிவிப்பு இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.

இதன்படி ஒரு அறிமுக இயக்குநருடன் இணைந்து விக்ரம் பணியாற்ற உள்ளதாகவும் இயக்குநரின் கதை விக்ரமை மிகவும் கவர்ந்துள்ளதாகவும் சாந்தி டாக்கீஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் விக்ரமின் இரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இந்தநிலையில், விக்ரமின் 63ஆவது திரைப்படத்தை அறிமுக இயக்குநர் போடி கே ராஜ்குமார் இயக்குகிறார் என்ற புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles