Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு - காவல்துறை உறுதி

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு – காவல்துறை உறுதி

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பான பகுப்பாய்வுக்குப் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு பாதுகாப்புத் தேவைப்பட்டால், அது குறித்து எழுத்து மூலம் கோரிக்கை விடுக்க முடியும் என காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதன்படி, அவர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் குறித்து ஆராய்ந்து, பாதுகாப்பு வழங்க வேண்டும் என உறுதிப்படுத்தப்பட்டால், அந்தப் பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பாதுகாப்புக்காக கைத்துப்பாக்கியை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, துப்பாக்கி வைத்திருப்பது என்பது ஆபத்தானது என்றும், இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள்ளே துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்ட வரலாறுகளும் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

ஆகவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் துப்பாக்கிக் கோரினால் அதுப்பற்றி அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular