உலக கோப்பையுடன் தூங்கும் இந்திய வீராங்கனைகள் – புகைப்படம் வைரல்

மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நேற்று நடைபெற்றது.

இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.

299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர்.

45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இதையும் படியுங்கள்: வரலாறு படைக்கப்பட்டுள்ளது… உலக கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு ரஜினிகாந்த் பாராட்டு!

இந்நிலையில், வீராங்கனைகள் ராதா யாதவ், அருந்ததி ரெட்டி, ஸ்மிருதி மந்தனா ஆகியோர் உடன் படுக்கையில் உலக கோப்பையை வைத்துக்கொண்டு தூங்கும் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “நாம் இன்னும் கனவு காண்கிறோமா?” என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

முன்னதாக கால்பந்து உலக கோப்பையை வென்ற மெஸ்ஸி, டி20 உலக கோப்பையை வென்ற ரோகித் ஆகியோர் உலக கோப்பையுடன் தூங்கிய புகைப்படம் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles