இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி- வெளியான புது தகவல்

பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான படம் ‘தக் லைஃப்’. திரைப்படம் வெளியாகி மக்களிடையே எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்தார். படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டானது.

இயக்குநர் மணிரத்னம் தக்லைஃப் படத்தை தொடர்ந்து, தனது அடுத்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் தனது கதையை சிம்பு, விஜய் சேதுபதியிடம் கூறியதாகவும், இதில், சிம்பு அரசன் மற்றும் அஷ்வத்தின் படத்தில் பிஸியாக இருக்கும் நிலையில் விஜய் சேதுபதியை வைத்து எடுக்க முடிவு செய்துள்ளார்.

விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க ருக்மிணி வசந்திடம் பேச்சு வார்த்தை நடந்துக் கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles