ஒரே மாதத்தில் முகம் ‘பளிச்’ என வெள்ளையாக மாற வேண்டுமா? இதோ ராகி மாவு மேஜிக்!

பொதுவாக பெண்களுக்கு முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.

இருந்தாலும் அனைத்து பெண்களும் எப்போதும் முகத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ளத்தான் விரும்புவார்கள்.

அந்தவகையில், ஒரே மாதத்தில் வெள்ளையாக இந்த பேஸ்பேக்கை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
ராகி- 2 ஸ்பூன்
பால்- ¼ கப்

எப்படி தயாரிப்பது?
முதலில் ஒரு கிண்ணத்தில் ராகி எடுத்து அதனை பால் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.

ஒரு மணி நேரம் கழித்து அதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் முகத்தை பாலில் பஞ்சு தொட்டு முகத்தை துடைத்து சுத்தம் செய்துவிட வேண்டும்.

இதற்கடுத்து இந்த பேஸ்பேக்கை முகத்தில் போட்டு காய்ந்தவுடன் ஈரமான துணி கொண்டு துடைத்து எடுக்க வேண்டும்.

இது அதிகப்படியான எண்ணெய், அழுக்கு மற்றும் அசுத்தங்களை நீக்குகிறது. மேலும், சருமத்தை இயற்கையாக புத்துணர்ச்சியடையச் செய்கிறது.

இதனை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகம் பளிச்சென்று இருக்கும்.

 

#ClearSkin #FairnessTips #SkinWhitening #DarkSpotRemoval #PimpleFree #HealthySkin #AyurvedicBeauty #OrganicSkinCare #முகப்பொலிவு #சருமபராமரிப்பு

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles