அயகமவில் பயங்கரம்: அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட மோதலில் 57 வயது நபர் அடித்துக் கொலை!

அயகம, சமருகம பகுதியில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயமடைந்த குறித்த நபர், இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் சமருகம பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவர் என குறிப்பிடப்படுகின்றது.

அயலவர் ஒருவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 40 வயதுடைய சந்தேக நபரை சமருகம பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

#Ayagama #Ratnapura #CrimeNews #SriLankaNews #MurderInvestigation #BreakingNewsTamil #AyagamaPolice #Samanalagama #LocalNews#அயகம #இரத்தினபுரி #கொலை #குற்றச்செய்திகள் #இலங்கை #தமிழ்செய்திகள் #அதிரடிகைது #சமருகம #பரபரப்பு#CrimeUpdate #SriLankaCrime #PoliceArrest #Justice #TragicNews #RatnapuraDistrict #LKA #LatestNewsTamil

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles