பருத்தித்துறை நீதிமன்றத்தால் 600 கிலோ கிராம் கஞ்சா எரியூட்டி அழிப்பு

பருத்தித்துறை நீதிமன்றத்தால் 600Kg கஞ்சா இன்று ஞாயிற்றுக்கிழமை எரியூட்டி அழிக்கப்பட்டது.

இந்தியாவில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்ட கேரளக் கஞ்சா பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்ட 600kg வரையான கஞ்சாவே பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் எரியூட்டி அழிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்தக் கஞ்சா பருத்தித்துறை நகரசபைக்குச் சொந்தமான வெலிக்கண்டி குப்பை திடலில் வைத்து எரியூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles