இரணைமடு குளத்தின் 6 வான் கதவுகள் திறப்பு

கனமழையுடனான காலநிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இரணைமடுக்குளத்தின் 6 வான் கதவுகள் நேற்று திறக்கப்பட்டன.

இரணைமடுக்குளத்தின் நீரேந்து பகுதிகளுக்கு கிடைக்கப்பெற்ற மழைவீழ்ச்சியை கருத்தில் கொண்டு இரு வான் கதவுகள் 06 அங்குலமும் 4 வான்கதவுகள் 01 அங்குலமும் திறக்கப்பட்டன.

இதன் மூலம் 0.149 கனசென்ரிமீற்றர் நீர் வெளியேற்றப்படுகிறது என்று நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து மழை எதிர்வு கூறல் காணப்படுகின்ற நிலையில் தாழ் நிலப்பகுதியில் உள்ளவர்கள் அவதானமாக இருக்குமாறும் அந்தத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles