நுவரெலியா கிரகரி வாவிக்குள் விழுந்து கடல் விமானம் (sea plane) ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து இன்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

நுவரெலியா பிரதேசத்திற்கு வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லவிருந்த விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது விமானத்தில் இருந்த இருவர் காயமடைந்துள்ள நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here