வல்வெட்டித்துறையில் நேற்றைய தினம் இளைஞர் ஒருவரை பட்டம் வானில் இழுத்துச் சென்றது. இவ்வாறு இழுத்துச் செல்லப்பட்ட அவர் பலத்த முயற்சியின் பின்னர் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டார்.

ஜனவரி மாதத்தில் வடமராட்சியில் பலவிதமான சிறியது முதல் பெரியது வரையும் பல பட்டங்களை ஒன்றிணைத்தும் இளைஞர்கள் பறக்கவிடுவது வழமை.

நேற்றையதினம் வல்வெட்டித்துறை ரெயின்போது மைதானத்தில் 32 அடி உயரமான பட்டத்துடன் 4 பட்டங்களை தொடுத்து ஏற்றும் முயற்சியில் இளைஞர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வீசிய பலத்த காற்றில் தொடுவை கயிறை பிடித்திருந்த இளைஞர் எதிர்பாராதவிதமாக சடுதியா வானில் இழுத்துச் செல்லப்பட்டார்.

விரைந்து செயல்பட்ட இளைஞர்கள் மற்றும் அங்கிருந்தவர்களுடன் இணைந்து தொடுவை கயிற்றை கட்டுப்படுத்தி அவரை பாதுகாப்பாக தரையிறக்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here