சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாப்புக்கு கூட்டு அர்ப்பணிப்பு அவசியம். வளர்ந்துவரும் நெருக்கடி நிலைகளை எதிர்கொள்ள கூட்டாக பதிலளிக்க வேண்டும். இதற்கு பிராந்திய ஒத்திசைவு அவசியம். வலுவான தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்புக்கு இந்தியா தலைமை வகிக்க வேண்டும் – இவ்வாறு சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும், உலகளாவிய பாதுகாப்பு முன்னேற்றங்களுக்கு மத்தியில் தெற்காசியாவின் வலுவான ஒத்துழைப்பு அவசியம். அண்மையில், இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பொது அமைதியின்மையை சில தீவிரவாத சக்திகள் ஆதரித்து, ஊக்குவித்துள்ளன.

இந்த நிலையில், தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்கும் அரசியல் வன்முறைகளை தடுப்பதற்கும் சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் கூட்டு அர்ப்பணிப்பு அவசியம். எனவே, வளர்ந்துவரும் நெருக்கடி நிலைகளை எதிர்நோக்குவதற்கு கூட்டாக பதிலளிக்க வேண்டும். இதற்கு பிராந்திய ஒத்திசைவு அத்தியாவசியம்.

இந்த செயல்பாடுகளுக்கு இந்தியாவின் தலைமைத்துவமானது பிராந்தியத்தின் நீண்டகால அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு மையப்புள்ளியாக அமையும் – என்று நாமல் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here