வெனிசுலாவை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கர்களிடம் கோரிக்கை!

வெனிசுலாவில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள சர்வதேச விமான சேவையை பயன்படுத்தி, அமெரிக்க குடிமக்கள் அனைவரையும் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறும்படி அமெரிக்கா அறிவித்துள்ளது.

இது தொடர்பில் வெனிசியூலாவில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வெனிசுலாவில் பாதுகாப்பு நிலைமை தொடர்ந்து சீரற்றுள்ளது. வெனிசுலாவில் ஆயுதமேந்திய கிளர்ச்சி குழுவினரின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அவர்கள் தடுப்புகளை ஏற்படுத்தி அமெரிக்க குடிமக்கள் யாரேனும் உள்ளனரா? என தேடி வருகின்றனர். அவர்களிடம் இருந்து பாதுகாப்பாக விலகி இருக்கவும்.

வெனிசுலாவில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. அதனால் இதனை பயன்படுத்தி, வெனிசுலாவில் உள்ள அமெரிக்க குடிமக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளது.

இதேவேளை வெனிசுலாவில் உள்ள அமெரிக்கர்கள் பயணிக்கும்போது கவனத்துடனும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

வெனிசுலாவில் அமெரிக்கர்களை சிறை பிடித்தல், சிறை பிடித்து வைத்து சித்திரவதை செய்தல், பயங்கரவாதம், கடத்தல், உள்ளூர் சட்டங்களை தன்னிச்சையாக அமுல்படுத்துதல், உள்நாட்டு அமைதியின்மை மற்றும் மோசமான சுகாதார உள்கட்டமைப்பு உள்பட அமெரிக்கர்களுக்கு கடுமையான ஆபத்துகள் உள்ளன. அதனால், வெனிசுலாவுக்கு பயணிக்க வேண்டாம் என்று உச்சபட்ச அளவிலான எச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், வெனிசியூலா வெளியுறவு அமைச்சர் யுவான் கில், வெனிசுலா முழு அளவில் அமைதியாகவும் மற்றும் ஸ்திரத்தன்மையுடனும் உள்ளது என தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles