மோதல்களின் போதான பாலியல் வன்முறைகளில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி அவசியம்! ஐ.நா. மனித உரிமைகள் சபை

இலங்கையில் மோதல்களுடன் தொடர்புடைய பாலியல் வன்முறைகள் சர்வதேச சட்டங்களை பாரதூரமான முறையில் மீறியுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த காலங்களில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகளை பகிரங்கமாக ஏற்றுக்கொள்வதற்கும் அல்லது நீதித்துறை கட்டமைப்பிற்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கும் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

இலங்கையில் மோதல் தொடர்பான பாலியல் வன்முறைகள் தற்போதும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. இத்தகைய சம்பவங்களை எதிர்கொள்ளும் பாதிக்கப்பட்டவர்கள் அவற்றை அமைதியாக சகித்துக்கொண்டிருப்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மோதல் தொடர்பான பாலியல் வன்முறைகளைக் கையாள்வதற்கு முறையான சட்டக் கட்டமைப்பு இருப்பது அவசியமாகும். அத்துடன், பாதிக்கப்பட்டவர்களின் கௌரவத்தைப் பாதுகாப்பது ஒரு கட்டாய இலக்காக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles