பொங்குதமிழ் பிரகடனத்தின் 25ஆம் ஆண்டு நிறைவு யாழில்!

யாழ்.பல்கலைக்கழகத்தின் பொங்குதமிழ் பிரகடனத்தின் 25ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று சனிக்கிழமை நினைவு கூரப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், விரிவுரையாளர்கள், மாணவர்கள் இணைந்து பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்துக்குள் உள்ள பொங்குதமிழ் நினைவு தூபி முன் கூடி பொங்குதமிழ் பிரகடன நிறைவு நாளை நினைவு கூர்ந்தனர்.

இதன்போது பொங்குதமிழ் பிரகடனம் வாசிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வைத்து தமிழ் மக்களின் அபிலாஷைகளான சுயநிர்ணைய உரிமை, மரபுவழித்தாயகம், தமிழ்த் தேசியம் என்பவை அங்கிகரிக்கப்படவேண்டும் என பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles