இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் கடந்தும், போர்க் கால பாலியல் வன்முறையை அனுபவித்து ஏதிலிகளாக வாழும் இலங்கையர்கள் தொடர்ந்தும் போராடி வருவதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.

அரசின் அங்கீகாரம், நீதி, இழப்பீடு எதுவும் இல்லாத நிலையில், இந்த வன்முறைகளின் விளைவுகள் குடும்பங்களிலும் சமூகங்களிலும் நீடிப்பதாக அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கம் கடந்த கால வன்முறைகள் மற்றும் குற்றங்களை எதிர்கொள்ள தயக்கம் காட்டுவதால், நாடு என்ற ரீதியில் இலங்கை தோல்வியடைந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சர்வதேச அளவில் சுயாதீன விசாரணை அமைப்பு, குற்றவாளிகளுக்கு தண்டனை, மாற்றத்துக்கான இழப்பீடுகள் என்பன யாதார்த்தமாக பெற்றுக் கொடுக்கப்படாவிடின், உண்மையான மீண்டெழுதலுக்கு சாத்தியமில்லை என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here