இந்திய அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான சிறீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் இந்தியா செல்லவுள்ளனர்.
எதிர்வரும் 26ஆம் திகதி இந்திய குடியரசு தின கொண்டாட்டங்களில் பங்கேற்கவே இந்தக் குழுவினர் இந்தியாவின் ஒடிசாவுக்கு பயணமாகவுள்ளனர்.
இந்தியா பயணமாகும் குழுவில் சித்ரால் பெர்னாண்டோ, சமித்ரினி கிரியெல்ல, சத்துரு கலப்பட்டி, பிரசாத் சிறீவர்த்தன, இந்திக அநுருத்த, சஞ்சீவ எதிரிமன்னே, சம்பத் அத்துக்கோரள அரசியல் குழு உறுப்பினர் மிலிந்த ராஜபக்ஷ ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.
அத்துடன், விஜயன் காலத்துக்குரிய பௌத்த தொல்பொருட்கள், ஒடிசா பேரிடர் முகாமைத்துவ மையம் என்பவற்றையும் பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சுற்றுப்பயணம் தொடர்பான கலந்துரையாடல் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

















