வலிதென்மேற்கு பிரதேச சபையில் பிரஜாசக்திக்கு எதிராக பிரேரணை

தற்போதைய அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட உள்ள பிரஜாசக்திக்கு எதிரான பிரேரணை நேற்று வலிதென்மேற்கு பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டது.

குறித்த பிரேரணையை இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ரமணன் சபையில் முன்வைத்து கருத்துரைக்கையில்-

இந்தப் பிரஜாசக்தி என்பது சட்டத்துக்கும் ஜனநாயகத்துக்கும் விரோதமானதாகும். மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் ஒவ்வொரு பிரதேசத்திலும் அபிவிருத்திகளை செய்து வருகின்றபோதிலும் அரசியல் நோக்கத்திற்காக இந்த குழு கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியிலும் சமூக அமைப்புகளின் மத்தியிலும் குழப்பகரமான நிலை ஏற்பட்டுள்ளது.

உள்ளூராட்சிச் சபைகள் சுயாதீனமாக இயங்குகின்ற கட்டமைப்பை கொண்டுள்ள நிலையில், எச்சந்தர்ப்பத்திலும் இந்த குழு இயங்க முடியாது.

கிராமங்கள் தோறும் அமைக்கப்பட்டு வரும் பிரஜாசக்தி என்ற அமைப்பானது எமது சபையின் விதி மற்றும் நிர்வாக கட்டமைப்புகளிலும் எந்தவொரு சிபாரிசுகளையும் கோர முடியாது என இந்த சபையில் பிரேரணையை முன்வைக்கின்றேன்-என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles