இலங்கையில் 30 வீதமானோருக்கு மனநல பிரச்சனை

இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 30 வீதம் பேர் மனநலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் உரையாடிய மனநல மருத்துவர் மதுஷானி டயஸ், மனநலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களில் 60 அல்லது 65 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகமாக உள்ளனர் என குறிப்பிட்டார்.

இலங்கையில் முதியோர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாகவும், முதியோர் எதிர்கொள்ளும் மனநலப் பிரச்னைகள் குறித்த சமூக விழிப்புணர்வு இல்லாததால் ஏராளமான சவால்கள் எழுந்துள்ளன.

மேலும் முதியவர்களிடையே நினைவாற்றல் இழப்பு, மனச்சோர்வு போன்ற அறிகுறிகள் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை அல்லது புறக்கணிக்கப்படுகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் முதியோர்களிடையே மனநலப் பிரச்னைகள் குறிப்பிடத்தக்களவு பொது சுகாதார பிரச்னையாக மாறியுள்ளபோதிலும், போதுமான பாதுகாப்பு மற்றும் ஆதரவான கட்டமைப்பு இல்லாதது மிகப்பெரிய சவாலாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles