யாழ். கோட்டை புனரமைப்பு பணியை நேரில் பார்வையிட்டார் சுமந்திரன்

யாழ்ப்பாண கோட்டைக்குள் காணப்பட்ட அற்புத மாதா ஆலயம் சிதிலமடைந்துள்ள
நிலையில், அதனை அதன் வரலாற்று அடையாளத்துடன் மீளமைக்க தொல்லியல்
திணைக்களத்தால் இதுவரை எந்தச் சரியான முயற்சியும் எடுக்கப்படவில்லை என
குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் , யாழ்ப்பாண கோட்டை பகுதிக்கு நேற்று திங்கட்கிழமை
தமிழரசுக் கட்சியின் பதில் பொது செயலாளர் எம்.ஏ சுமந்திரன் நேரில் சென்று
பார்வையிட்டதுடன் , கோட்டைப் பகுதியில் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள
தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்களுடனும் கலந்துரையாடினார்

அதேவேளை கோட்டைப் பகுதியை சுற்றியுள்ள தொல்லியல் திணைக்களத்துக்கு
சொந்தமான காணிகளை சுற்றி தொல்லியல் திணைக்களத்தினால் எல்லை கற்கள்
நாட்டப்பட்டுள்ளன.

எல்லைக் கற்கள் நாட்டுவது குறித்து எந்த தரப்புடனும் கலந்துரையாடாது
அவற்றை நாட்டியுள்ளமை தொடர்பிலும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு
வரும் நிலையில் , அவற்றினையும் சுமந்திரன் பார்வையிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles