Monday, February 2, 2026
HomeMain Newsமுன்னாளர் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க விளக்கமறியலில்

முன்னாளர் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க விளக்கமறியலில்

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக்காலத்தில் லண்டன் பயணங்களுக்காக அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக கூறப்படும் விவகாரம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டார்.

இன்று இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரை பெப்ரவரி 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான விசாரணைகள் ஒரு மாதத்திற்குள் நிறைவு செய்யப்பட்டு, மார்ச் மாதத்தில் அவருக்கு எதிராக உத்தியோகபூர்வமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுமென சட்டமா அதிபர் திணைக்களம் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular