பட்ஜெட்டை எதிர்க்காத தமிழ் தரப்பு கிவுல் ஓயாவை எதிர்த்துக் கூக்குரல்! கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு

2026 வரவு-செலவுத்திட்டத்தை எதிர்க்காத தமிழ்த் தரப்பினர், இன்று கிபுல்
ஓயா திட்டத்திற்கு எதிராக கூக்குரலிடுகின்றனர் என, தமிழ்த் தேசிய மக்கள்
முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்
பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-

2026 வரவு-செலவுத்திட்டத்தையும், சிங்கள குடியேற்றத்தையும், நல்லிணக்கம்
என்ற போர்வையில் எதிர்க்காத தமிழ்த் தரப்பினர், இன்று கிவுல் ஓயா
திட்டத்திற்கு கூக்குரலிடுகின்றனர். ஆனாலும், அவர்கள் இன்று எதிர்ப்பு
வெளியிடுவதை வரவேற்கிறோம்.

மகாவலி எல் வலயத்துக்குள்ளேயே கிவுல் ஓயா திட்டமும் வருகிறது.

இந்த கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் அரசியல் இலாபம் எடுத்துகொள்வதற்காகவே
தமிழரசுக் கட்சி இப்போது எதிர்ப்பு தெரிவிக்கின்றது. மாகாண சபைத் தேர்தல்
வரக்கூடும் என்பதற்காகவே அவர்கள் விழுத்தடித்து நடந்துகொள்கிறார்கள்.
ஆகவே இந்த கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னின்று
மேற்கொள்ள சிவில் சமூகம் முன்வரவேண்டும். அதனையே நாங்களும்
விரும்புகிறோம். அவ்வாறான சந்தர்ப்பத்தில் எங்கள் ஆதரவும் அதற்கு
இருக்கும் – என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles