பளை விபத்தில் பெண் மரணம்!

மோட்டார் சைக்கிளை டிப்பர் வாகனம் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

ஏ- வீதி, பளை நகரப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் பச்சிலைப்பள்ளி – சோரன்பற்றைச் சேர்ந்த குமாரசாமி செல்வவதி (வயது 63) என்பவரே உயிரிழந்தார்.

பளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற டிப்பர் வாகனமும் யாழ்ப்பாணத்திலிருந்து பளை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றது. இதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணே உயிரிழந்தார்.

டிப்பர் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles