கிளிநொச்சியில் டிப்பர்மீது துப்பாக்கிச்சூடு

கிளிநொச்சி கல்லாறு பகுதியில் கட்டளையை மீறி பயணித்த டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் இருந்து சட்ட விரோதமான முறையில் அனுமதி பத்திரம் இன்றி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தினை பொலிஸார் சோதனை இடுவதற்கு முற்பட்ட சந்தர்ப்பத்தில் சமிக்கையை மீறிச் சென்ற டிப்பர் மீது இவ்வாறு துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் டிப்பரின் எரிபொருள் தாங்கி மற்றும் டயர் என்பன சேதமடைந்துள்ளன.

இதேவேளை டிப்பர் சாரதி தப்பிச்சென்றுள்ளதுடன் தர்மபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles