கொலைக் குற்றவாளி ஒருவருக்கு கிளிநொச்சி மேல்நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது

கொலைக் குற்றவாளி ஒருவருக்கு, கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் இன்று திங்கட்கிழமை மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குரவில் கிராமத்தில், 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலையின் பிரதான சூத்திரதாரிக்கே மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பூப்புனித நீராட்டுவிழா நிகழ்வில், இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த் தர்க்கக்கத்தை அடுத்து குறித்த எதிரி, அதே இடத்தைச் சேர்ந்த 19 வயதான அர்ச்சுனன் றஜீபனை வயிற்றில் குத்தி படுகாயமேற்படுத்தி கொலை செய்த குற்றத்துக்காக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி ஜி.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் வழக்கு, தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டவேளை மரண தண்டனை விதிக்கப்பட்டது. எதிர்தரப்பு சட்டத்தரணி என்.சிறீகாந்தா முன்னிலையில் தீர்ப்பு வாசித்துக் காட்டப்பட்டதுடன், குறித்த எதிரியிடம், மன்றுக்கு ஏதாவது கூற விரும்புகின்றீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டு அவருக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

அதனையடுத்து, நீதிமன்றத்தின் அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்பட்டு
அனைவரும் எழுந்து நிற்க குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles