ஒட்டுசுட்டான் பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியங்குளம் அலகரை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன் மரணமடைந்துள்ளார்.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் புளியங்குளம் அலகரை கிராமத்தை சேர்ந்த மோகனராசா லோயிதன் (வயது 5) என்ற சிறுவனே இவ்வாறு மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்

குறித்த சிறுவன் அவரது அம்மம்மாவுடன் புல்லு வெட்டுவதற்கு சென்ற போது புல் வெட்டும் பகுதியில் யானைக்காக அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத மின்சார வேலியில் (நேரடியாக இலங்கை மின்சார சபையின் மின் பாய்ச்சப்பட்ட) மின்சாரக் கம்பியில் சிறுவனின் கழுத்து அகப்பட்டதால் மரணம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுவன் மின்சாரம் தாக்கிய நிலையில் ஒட்டுசுட்டான் வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்

மரணமான சிறுவனின் உடல் ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் இருந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு சட்டவைத்திய அதிகாரியின் விசாரணைகளுக்காக
பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது

மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles