இராணுவ சிப்பாய்கள் 9,158 பேருக்கு தரநிலை உயர்வு

இன்று புதன்கிழமை கொண்டாடப்படுகின்ற 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை இராணுவத்தின் நிரந்தர மற்றும் தொண்டர் படைகளின் 9158 சிப்பாய்களுக்கு அடுத்த நிலை உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

சிப்பாய்கள் பிரிவில், அதிகாரவாணையற்ற அதிகாரி –II நிலையிலிருந்து அதிகாரவாணையற்ற அதிகாரி-I ஆம் நிலைக்கு 260 பேரும், அதிகாரவாணையற்ற அதிகாரி –II ஆம் நிலைக்கு 1211 பணிநிலை சார்ஜென்களும் தரம் உயர்த்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் பணிநிலை சார்ஜென் நிலைக்கு 1704 சார்ஜென்களும், 2339 கோப்ரல்கள் சார்ஜென் நிலைக்கும், 2204 லான்ஸ் கோப்ரல்கள் கோப்ரல் நிலைக்கும், 1440 சிப்பாய்கள் லான்ஸ் கோப்ரல் நிலைக்கும் நிரந்தர படையணி மற்றும் தொண்டர் படையணிகளிலில் இருந்து தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles