Wednesday, February 4, 2026
HomeMain Newsலிபியாவின் முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சுட்டுக்கொலை

லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சுட்டுக்கொலை

லிபியாவின் முன்னாள் அதிபர் முஹம்மர் கடாபியின் மகன் சைஃப் அல்-இஸ்லாம் கொலை நேற்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

கேணல் முஹம்மர் கடாபி லிபியாவை ஆட்சி செய்தபோது, சைஃப் அல்-இஸ்லாம் 2000 முதல் 2011 வரை அவரது இரண்டாம் நிலைத் தளபதியாகப் பணியாற்றினார். இருப்பினும், அவர் எந்தப் பதவியையும் வகிக்கவில்லை.

சைஃப் அல்-இஸ்லாம் இறந்ததை அவரது சட்டத்தரணி அப்துல்லா உத்மான் சமூக ஊடகங்களில் அறிவித்தார்.

முகமூடி அணிந்த நான்கு துப்பாக்கிதாரிகள் சிந்தனா நகரில் உள்ள சைஃப் அல்-இஸ்லாமின் வீட்டிற்குள் நுழைந்து அவரைச் சுட்டுக் கொன்றதாக லிபிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சயீப் அல்-இஸ்லாம் இறக்கும் போது அவருக்கு வயது 53 என்று கூறப்படுகிறது.

நீண்ட காலமாக அரசியல் ரீதியாக நிலையற்ற தன்மை கொண்ட லிபியாவில் சயீப் அல்-இஸ்லாம் கடாபி ஒரு முக்கிய அரசியல்வாதியாகவும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலை முழுமையாக விசாரித்து, குற்றவாளிகளை அடையாளம் கண்டு, நடவடிக்கையை திட்டமிட்டவர்களை தண்டிக்குமாறு சைஃப் அல்-இஸ்லாமின் அரசியல் குழு லிபிய நீதித்துறை மற்றும் சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது ஒரு தனி நபர் படுகொலையாக இல்லாமல், ஒரு பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று அந்தக் குழு மேலும் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular