தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள் அவசியம் – மஹிந்த அணி

‘வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள், பொலிஸ் நிலையங்கள் இருப்பதால்தான் தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.’

– இவ்வாறு மஹிந்த அணி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சாந்த பண்டார ஊடகங்களிடம் கூறியதாவது:-

‘சுதந்திரம் என்பது அபிமானம். அதன் கம்பீரத் தன்மையைக் குறைமதிப்புக்கு உட்படுத்தக்கூடாது. உலகில் எந்தவொரு நாடும் அவ்வாறு செய்யாது.

ஆனால், இலங்கையில் தேசியமக்கள் சக்தி ஆட்சியின் கீழ் சுதந்திரத்தின் கம்பீரத்தன்மை இல்லாமல் போயுள்ளது. செலவுகளைக் கட்டுப்படுத்துகின்றோம் என்ற போர்வையில் அபிமானம் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.

படையினரின் வீரதீரச் செயல்கள் பற்றி பேசப்படவில்லை. நாட்டில் இன்று அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ளது.

இந்நிலையில் இலங்கையின் 78ஆவது சுதந்திர தினத்தன்று வடக்கு, கிழக்கில் கறுப்புக்கொடி ஏற்றப்படுகின்றது. இதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள், பொலிஸ் நிலையங்கள் இருப்பதால் தான் தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு சில இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன. எஞ்சியவற்றையும் அகற்றினால் பொலிஸையும் அகற்றுமாறு கோருவார்கள்.’ – என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles