யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட விசாலாட்சி கதிரவேலு அவர்கள் 06-02-2026 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை கதிரவேலு (கிருபா கபே, கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, பர்வதம், மற்றும் சுபத்திரை (பிரான்ஸ்), காலஞ்சென்ற நாகராசா ஆகியோரின் அன்பு சகோதரியும்,
ஜலாதேவி, கிருபாகரன் (ஜேர்மனி) மற்றும் காலஞ்சென்ற பிரபாகரன் (KP கரன்) ஆகியோரின் அன்பு தாயாரும்,
பஞ்சரட்ணராஜா, காலஞ்சென்ற விஜிதா, மற்றும் கலைமதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நல்லதம்பி(முத்தையா), இளையதம்பி, பொன்னம்மா, நாகேசு, மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ராஜதீபன் – திவ்யா, தர்ஷன் – மியோ, லாவன்ஜா, சிந்துஜன் – ஓர்லின், கிந்துஜா – யாதவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜெயன், அர்வின், Reign, Nova, நிலா ஆகியோரின் அருமை பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

