பங்களாதேஷ் நாடாளுமன்றத் தேர்தல்: 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அமைக்கிறது பி.என்.பி.

பங்களாதேஷில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெள்ளிக்கிழமை வெளியாகி வருகிறது. இதில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசிய கட்சி (பிஎன்பி) 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகி உள்ளது.

பங்களாதேஷில் மொத்தம் 300 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ஆட்சியமைக்க 151 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அந்த வகையில் பிஎன்பி தலைமையிலான 10 கட்சிகளின் கூட்டணி சுமார் 201 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடக நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதை பிஎன்பி கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் சர்வதேச செய்தி நிறுவனத்திடம் உறுதி செய்துள்ளார். தேர்தலில் தங்கள் கட்சி வெற்றி பெற்றுள்ளதகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், தேர்தல் நடைமுறை மற்றும் அதன் முடிவின் நேர்மை குறித்து அடிப்படைவாத கொள்கைகளை பின்பற்றும் ஜமாத் – இ – இஸ்லாமி கட்சி கேள்வி எழுப்பி உள்ளது. அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகும் வரை அமைதி காக்குமாறு தொண்டர்களிடம் அக்கட்சி தெரிவித்துள்ளது. அதிகாலை 4 மணி நிலவரப்படி மொத்தம் 56 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதாக தகவல்.

20 ஆண்டுகளுக்கு பிறகு பங்களாதேஷ் தேசிய கட்சி ஆட்சியமைக்க உள்ளது. இந்நிலையில், அக்கட்சியை வெற்றிக்கு இட்டுச் சென்ற பங்களாதேஷ் தேசிய கட்சி, உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் வாழ்த்து தெரிவித்துள்ளனர். டாக்காவில் உள்ள அமெரிக்க தூதரகமும் தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

பங்களாதேஷில் கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர்களின் தீவிர போராட்​டத்​தால் பிரதம​ராக இருந்த ஷேக் ஹசீனா நாட்​டை​விட்டு வெளி​யேறி இந்​தி​யா​வில் தஞ்​சம் அடைந்தார். அங்கு அவரது ஆட்சி கவிழ்க்​கப்​பட்​டதை அடுத்து முகமது யூனுஸ் தலை​மை​யில் இடைக்​கால அரசு அமைக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles