பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாசார் பகுதியில் ஒரு கோடியே 5 லட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று வியாழக்கிழமை இராணுவத்தினருடன் பளை பொலிஸார் மாசார் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கூட்டுச் சோதனை மேற்கொண்டனர்.
இதன்போது சுமார் ஒரு கோடியே 5 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 14 கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பாக பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

