வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட வழிசமைக்கப்படும்

வெடுக்குநாறி மலையில் சைவமக்கள் சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபடுவதற்குரிய வழிவகைகள் ஏற்படுத்தப்படுமென வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் உபாலி சமரசிங்கவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இதன்போது, சிவராத்திரி வழிபாட்டுக்கு இடமளித்து, சைவ மக்களின் வழிபாட்டுரிமை பாதுக்கப்படவேண்டுமென்று, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தில் விடுத்திருந்தார்.

இது தவிர சைவமக்கள் சுதந்திரமாக வழிபட இடமளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இந்த நிலையிலேயே, இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles