IMF முகாமைத்துவப் பணிப்பாளர் நாளைமறுதினம் இலங்கை வருகிறார்

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா நாளை மறுதினம் திங்கட்கிழமை 16ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்து, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து கலந்துரையாடுவார்.

இதுதவிர கடந்த ஆண்டு நவம்பரில் இலங்கையைத் தாக்கிய ‘டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளை அவர் நேரில் பார்வையிடுவார்.

சூறாவளி பாதிப்பிலிருந்து நாடு மீண்டு வரவும், நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும் எவ்வாறு உதவ முடியும் என்பது குறித்தும், அவர் ஆலோசிப்பார்.

முன்னதாக, சூறாவளி அனர்த்தத்தைத் தொடர்ந்து, கடந்த டிசம்பரில், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு சுமார் 206 மில்லியன் டொலர் அவசர நிதியுதவியை வழங்கியமை குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles