பாகிஸ்தானை வீழ்த்தி சுப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது இந்தியா

2026 உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 61 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் இஷான் கிஷான் அதிகபட்சமாக 77 ஓட்டங்களையும், அணித்தலைவர் சூரியகுமார் யாதவ் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் அயூப் 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் 176 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 18 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 114 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் உஸ்மான் கான் அதிகபட்சமாக 44 ஓட்டங்களை பெற்றதுடன் சகீன் அப்ரிடி ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் ஜஸ்பிரிட் பும்ரா, அக்ஸர் பட்டீல் வருண் சக்கரவர்த்தி, கார்திக் பாண்டியா ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். ஆட்டநாயகனாக இஷான் கிஷான் தெரிவானார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, ‘A’ குழுவிலிருந்து சுப்பர் 8 சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.

2007 முதல், இந்தியாவும் பாகிஸ்தானும் 17 ரி-20 போட்டிகளில் மோதியுள்ளன, அவற்றில் 13 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன், ஒரு போட்டி சமநிலையில் முடிந்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles