அமரர் தம்பிஐயா கிருபானந்தமூர்த்தி (யேசு)

பிறப்பு11 OCT 1950 – இறப்பு13 FEB 2021
வயது 70
புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) முல்லைத்தீவு, Sri Lanka Sarcelles, France

யாழ். புங்குடுதீவு கிழக்கு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைதீவு முத்து ஐயன் கட்டு வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Sarcelles ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிஐயா கிருபானந்தமூர்த்தி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஐந்தாகியும்
எங்களால் ஆறமுடியவில்லை
உங்கள் பிரிவால்
வடியும் கண்ணீரும் காயவில்லை

பாசமழை பொழிந்து
நேசமாய் எமை வளர்த்து
துணிவுடனே நாம் வாழ
வழியதனைக் காட்டிவிட்டு
எமைவிட்டு சென்றதெங்கே?

காலங்கள் கடந்து போகும் ஆனால்
கண்மணியே அப்பா உன் நினைவுகள் மட்டும்
காலம்தனை வென்று எம்மிடத்தில் நிற்கும் – எம்
கண்ணிறைந்த கண்ணீரோடு அப்பா…!

இன்றுடன் ஐந்து ஆண்டுகள் ஓடி
மறைந்தாலும் உங்கள் நினைவுகள்
என்றென்றும் எம்மை விட்டகலாது.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles