திம்பு கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய அரசியல் யோசனைகளை தயாரிக்க பிரத்தியேகக் குழு – கலந்துரையாடலில் தீர்மானம்

வரலாற்றுச் சிறப்புமிக்க திம்பு கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய அரசியல் யோசனைகளைத் தயாரிப்பதற்காக ஒரு பிரதியேகக் குழுவை நியமிக்க இக்கூட்டத்தில் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவித்தார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

தமிழ் தேசிய பேரவையின் ஏற்பாட்டில் வரப்போகும் புதிய அரசியல் அமைப்பு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய சமஷ்டி அடிப்படையிலான அரசியல் அமைப்பை வலியுறுத்தும் கலந்துரையாடல் இன்று ஞாயிற்றுக்கிழமை நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது.

கலந்துரையாடலின் முடிவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

தமிழ் தேசத்தினுடைய அரசியல் அபிலாஷைகளை பாதுகாப்பதற்கும் அதேவேளை அந்த அரசியல் அபிலாஷைகளை முழுமையானதொரு அரசியல் தீர்வை வலியுறுத்துவதற்கும் உடைய ஒரு கலந்துரையாடல் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது.

இதில் பங்கேற்ற பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து ஒரு பொதுச்சபையை உருவாக்கியுள்ளதோடு, எதிர்காலத்தில் இணைய விரும்பும் ஏனைய தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளன என்றார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க திம்பு கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய அரசியல் யோசனைகளைத் தயாரிப்பதற்காக ஒரு பிரதியேகக் குழுவை நியமிக்க இக்கூட்டத்தில் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை நிராகரிக்கும் அதேவேளை, இப்பொதுச்சபையின் மூலம் எடுக்கப்படும் முடிவுகளே எதிர்கால அரசியல் நகர்வுகளைத் தீர்மானிக்கும் என இணக்கம் காணப்பட்டுள்ளது.

வரவிருக்கும் வாரங்களில் இக்குழு தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்றும், அதனுடைய பெயர் பட்டியல் இறுதிசெய்யப்படும். இது தமிழ் மக்களின் அரசியல் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல் என்றும் இந்த ஆதாரம் விளக்குகிறது – என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles